தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த எனது கவிதை....

Sunday, April 8, 2012

நிருபர்

மூடிமறைக்கப்பட்ட சம்பவங்களை

வெளிச்சத்துக்குக் கொண்டுவரும்

நிதர்சனவாதி.. அச்சமின்றி அலைந்து

அவலங்களை அகிலத்துக்கு வழங்கும்

அகிம்சாவாதி செய்திகளை சேகரித்து

செவ்வனே தொகுத்தளிக்கும் மக்கள் நண்பன்...


உண்மையை உலகிற்கு எடுத்துரைக்க

தன் உயிரையே தியாகம் செய்யும் 

உண்மைப் பாங்கன்

மெய்யை நிலை நாட்ட 

பேனா முனையில் 

போராடும் போராளி...

அவன் எழுத்துருவில் 

வடித்த தகவல்கள்...

அவனிக்கு எடுத்துரைக்க

ஏந்திவரும் பத்திரிகை...

நாட்டின் தலையெழுத்தை

மாற்றும் உந்து சக்தியும் 

அவன் கையேழுத்தே..

நாளிதழ் சுமந்து 

வரும் நாட்குறிப்பில் நாடெங்கும்

பவனிவரும் செய்திகளோ ஏராளம்

எதையும் துச்சமென எழுத்தாணி

பிடித்து எழுதிய உண்மைகள்...

ஏற்றத்தாழ்வின்றி

ஏந்திடும் பத்திரிகை

விளைநிலத்தின்

ஏர்க்கலப்பையாய் உழுது

உரமாய் உறிஞ்சி 

உழைப்பால் பெருகி

பத்திரிகைத் துறைக்கு 

பசளையிட்ட 

பெருமையும்

அவனே சாரும்..
பிரியமுடன்:உஷா நிலா

5 comments:

  1. உஷா.. ஒரு நிருபரைப்பற்றி நான் வாசித்த சிறந்த கவிதை. வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துகள்...!!!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உனது திறமைக்கு என் பாராட்டுகள்
    உன் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும்
    என் ஆதரவு என்றும் இருக்கும்
    உன்னுள் ஒருத்தனாய் யோ.திலக்

    ReplyDelete
  4. Hi Usha its suberb to have a website. I wish you all the best to continue your works. This is a wonderful job really Usha. Congratulations.....

    ReplyDelete

  5. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
    Ayurveda
    Ayurveda Resorts
    Ayurveda Kovalam
    Ayurveda Trivandrum
    Ayurveda Kerala
    Ayurveda India

    ReplyDelete